தமிழகம்

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: 25 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

44views

தமிழகத்தில் 4ஆவது முறையாக பிரமாண்ட தடுப்பூசி முகாம் மாநிலமெங்கும் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 4ஆவது முகாம் இன்று 20 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 3 முகாம்களில் மட்டும் சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 35% பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை என்றும் 65% பேர் 2ஆவது தவணை ஊசி செலுத்திக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அவர்கள் இன்றைய முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய 13 சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் திருப்தியாக இல்லை என அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் அம்மாவட்டங்களில் தடுப்பூசி பணிகள் கூடுதல் முனைப்போடு மேற்கொள்ளப்பட உள்ளது. இன்று நடைபெறும் மெகா முகாம்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!