பேரிடர் மீட்பு நிதியாக 7,274 கோடி ரூபாயை 23 மாநிலங்களுக்கு முன்கூட்டியே அளிக்க, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலங்களில் ஏற்படும் பேரிடர் மற்றும் அவசர காலங்களை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையாக 1,599.20 கோடி ரூபாய் ஏற்கனவே ஐந்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், மேலும் 23 மாநிலங்களுக்கு இரண்டாவது தவணைத் தொகை 7,274 கோடி ரூபாயை முன்கூட்டியே வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த நிதியின் வாயிலாக கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மாநில அரசுகள் உதவி செய்யவும் இந்த நிதி பயன்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.