95
அன்று மாலை செழியன் வரவுக்காக அலுவலக வேலைகளை முடித்துவிட்டு அங்கேயே காத்திருந்தாள் கார்குழலி.
செழியனும் சிறிதுநேரத்தில் வந்து “சற்று வேலை அதிகமாக இருந்ததால் என்னால் சீக்கிரம் வர முடியவில்லை. நாளை காலை அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சீக்கிரமே வந்துவிடு. உன்னுடன் சிறிது நேரம் பேச வேண்டும்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து இருவரும் கிளம்புகின்றனர்.
அன்று வீடு திரும்பிய செழியன் இரவு முழுவதும் அடுத்த நாள் காலை கார்குழலியிடம் எப்படி அவன் மனதில் நினைத்த விஷயத்தை அவளிடம் சொல்லுவது என்று நினைத்து குழம்பிக் கொண்டிருந்தான்.
தேவி அவனது அறைக்குள் வந்து “சாப்பிடுங்கள்” என்று கூப்பிட்டும் இல்லை “எனக்கு இன்று பசிக்கவில்லை
வயிறு ஏதோ போல் இருக்கிறது. நீ போய் சாப்பிடு “என்று கூறிவிட்டு உறங்காமல் கண்ணை மட்டும் மூடிக்கொண்டு படுத்திருக்கிறான்.
அடுத்த நாள் காலை சீக்கிரமாக எழுந்து அலுவலகத்திற்கு கிளம்புகிறான்
“தேவி என்னங்க சீக்கிரமா இன்னிக்கு கிளம்பிட்டீங்க “என்று கேட்க ….
“ஆமாம்! எனக்கு இன்று நிறைய வேலை இருக்கிறது அதனால் தான் சீக்கிரம் கிளம்புகிறேன் “என்று சொல்லிவிட்டு கிளம்ப நேராக அம்மன் கோவிலில் நிற்கின்றான்.
கார்குழலி சற்று நேரத்தில் வர ………
“வா…கொஞ்ச நேரம் உன்னுடன் மண்டபத்தில் உட்கார்ந்து பேசணும்.”
கார்குழலியும் அவனுடன் செல்கிறாள்.
“என்ன ஏதோ பேச வேண்டும் என்று சொன்னீர்கள்.”
“ஆமாம்! நான் நிறைய யோசித்து விட்டேன்.”
“என்ன யோசனை?”
“உன்னை பற்றி தான். நான் உன்னை நேசித்ததால் தான் நீ இன்று கஷ்டபடுகிறாய். அதனால் நான் செய்த தவற்றை நானே சரி செய்கிறேன்.”
“உங்கள் மீது எந்த தவறும் இல்லை, நான்தான் உங்களை வேண்டாம் என்று உதறினேன்.
அதனால் தான் இப்பொழுது கஷ்டப்படுகிறேன். இது நான் செய்த தவறு இதில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.”
“நீ ஆயிரம் சொல்லி இருந்தாலும் நான் உன்னை விட்டு இருக்கக்கூடாது. அதனால் உன்னை நானே பார்த்துக்கொள்கிறேன்.”
“புரியவில்லை? என்ன சொல்கிறீர்கள் என்று.”
“உன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.”
“அது எப்படி சரி வரும். உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், மகளும் இருக்கிறார்கள்.
இதில் நான் எப்படி???”
“அதை விடு அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இதற்கு சம்மதம் மட்டும் சொல். அடுத்த வேலையை நான் பார்க்கிறேன்.”
“இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் கொஞ்ச நாட்கள் தேவை இதைப்பற்றி யோசிக்க…. அதன்பிறகே என்னால் பதில் சொல்ல முடியும்.”
“சரி நீ இந்த ஒரு வாரம் எடுத்துக் கொள். அதன் பிறகு எனக்கு உனது முடிவை சொல்.
அது போதும் எனக்கு இப்பொழுது அலுவலகத்திற்கு கிளம்பலாம். என்னுடன் நீயும் வந்துவிடு .”
இருவரும் அலுவலகத்திற்கு பயணிக்கிறார்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment