விளையாட்டு

பஞ்சாப்புக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி

67views

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். லீவிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, அவரையடுத்து வந்து சஞ்சு சாம்சன் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த லியம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த லோம்ரோர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார்.

ஜெய்ஸ்வால், 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து லோம்ரோர் 43 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இந்நிலையில், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 185 ரன்களை சேர்த்தது.

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 43 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். கே.எல்.ராகுல் 33 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மார்கிராம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடியின் அதிரடி காரணமாக அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. கடைசி ஓவரில் வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில் பூரன் 32 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் அய்டன் மார்கிராம் 26 (20) ரன்களும், ஆலன் (0) ரன் எதுவும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணியால் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளும், சேத்தன் சகாரியா மற்றும் ராகுல் தேவாட்டியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!