தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இரவு 3.30 மணி வரை அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகரில் 8.2 செ.மீ மழை பொழிந்துள்ளது. தரமணி – 7.5 செ.மீ, பெருங்குடி – 7.3 செ.மீ, அண்ணா நகர் – 7.3 செ.மீ, நந்தனத்தில் 6.6 செ.மீ மழை பெய்துள்ளது. மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், பெருங்குடி, நந்தனம், சென்ட்ரல், கிண்டியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி, போரூரில் கனமழை பெய்தது. பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.