உத்தரகாண்ட் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது பல மாநிலங்களில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்த்கம் யாத்திரை நடத்த அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரித்வாருக்கு வந்தவண்ணம் இருந்தனர். இதனால், அங்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது. அதாவது நாளை காலை காலை 6 மணி முதல் அக்டோபர் 5ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.