இந்தியா

போராட்டமாக மாறிய சுரேஷ் கோபியின் சல்யூட் விவகாரம் .

52views
மலையாள நடிகர் மற்றும் பாஜாகவின் திரிச்சூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் கோபி உதவி ஆய்வாளரை ‘தன்னை சல்யூட் செய்யுமாறு’ கேட்டுகொண்டது தற்போது கேரளாவில் பிரச்சினையை கிளப்பியுள்ளது .
நடிகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கோபி கடந்த சில நாட்களுக்கு முன் திரிச்சூர் சென்றிருந்தபோது அங்கு செல்லும் வழியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் தன்னை பார்த்தும் சல்யூட் வைக்காததால் தானாக அவரிடம் சல்யூட் வைக்குமாறு கேட்டுள்ளார் .
இந்த விஷயம் செய்தியாக வெளிவர கடும் பேசுபொருளாக மாறிப்போனது .இதனிடைய கேரள காங்கிரஸ் இளைஞரனி போராட்டத்தை நடத்தி அதில் சட்டபடி காவலர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சல்யூட் வைக்க அவசியம் இல்லை இதனால் சுரேஷ் கோபி செய்தது அதிகார துஷ்பிரயோகம் என்று விமர்சித்து கடுமையான முறையில் போராட்டம் நடத்தியுள்ளது .

2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சுரேஷ் கோபி கடந்த இரண்டு வருடமாக திரிச்சூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் . இதற்கு முன்பே பல முறை முரனான கருத்துக்களை கூறி சுரேஷ் கோபி விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்தபோது நாட்டில் மக்கள் தொகை கட்டுபாடு சட்டம் அமல்படுத்த வேண்டும் அதை பாஜக சிறப்பாக செய்யும் என்று கூறியது கேரளம் தாண்டி பல மாநிலங்கலில் பேசுபொருளாக மாறியது .

பாஜக நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது ,ஆளும் கம்முயூனிஸ்ட் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸின் கையே கேரளத்தில் ஓங்குவதால் தமிழகத்தை போலவே கேரளத்திலும் எதிர்கால ஆட்சியை பிடிக்க பாஜக பல செயல்திட்டங்களை தீட்டி வருகிறது .

இறுதியாக இந்த விவகாரத்திற்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த சுரேஷ் கோபி தான் காவலரை மிகுந்த அமைதியான முறையிலே சல்யூட் அடிக்குமாறு கேட்டுகொண்டதாகவும் .ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இது அவமரியாதை ஆகும் என்றும் கூறியுள்ளார் .
ஆனால் சட்டபடி முதல்வர் கேபினட் அமைச்சர்கள் மற்றும் காவல் உயர்அதிகாரிகளுக்கே சல்யூட் அடிக்க வேண்டியது காவல்துறையின் கடமையாகுமே தவிர எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு சல்யூட் வைக்க அவசியமில்லை என சட்டம் சொல்கிறது .
  • கே.எஸ்.விஷ்ணுகுமார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!