விளையாட்டு

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு இது தான் காரணம்; எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம் !!

51views

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 தொடர் கேப்டனாக பொறுப்பேற்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது ஆச்சரியமாக உள்ளது என்று இந்திய அணியின் முதன்மை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை கிரிக்கெட் உலக புகழின் உச்சிக்கே எடுத்த சென்ற முன்னாள் வீரர் தோனி, திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக அவதாரம் எடுத்தார். இந்திய அணியின் வெற்றிகர கேப்டனாக திகழ்ந்து வந்த விராட் கோலி இந்திய அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் மேலும் கேப்டனாக பல சாதனைகளையும் செய்துள்ளார், இருந்தபோதும் ஐசிசி ஆல் நடக்கும் முக்கியமான தொடர்களில் விராட் கோலியால் சிறப்பாக செயல்படவில்லை.

இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட சிலருக்கு விராட் கோலி டி20 தொடர் கேப்டன் பதவியை விட்டு விட்டு பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்தினால் அது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விராட்கோலி உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் டி20தொடர் கேப்டனாக இனி நான் செயல்பட மாட்டேன் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

விராட் கோலியின் இந்த திடீர் முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் விராட் கோலியின் இந்த முடிவால் வேதனையடைந்துள்ளனர், மேலும் விராட் கோலியின் இந்த ஓய்வு குறித்து பலதரப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முதன்மை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார், உலகக் கோப்பை தொடருக்கு முன் விராட் கோலி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது, ஆனால் விராட் கோலி இதன் காரணமாக உலக கோப்பை தொடரில் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் மிகச் சிறந்த முறையில் விளையாடுவார். மேலும் விராட் கோலியும் இந்த முடிவு அவருக்கு பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!