விளையாட்டு

கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்.! விராட் கோலி திடீர் அறிவிப்பு..! ரசிகர்கள் அதிர்ச்சி!!

40views

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகிய பிறகு, விராட் கோலி இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு தற்போது வரை இந்திய அணியின் டெஸ்ட், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக நீடித்து வருகிறார்.

இந்நிலையில், டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராத் கோலி அறிவித்துள்ளார். இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 8-9 ஆண்டுகளாக 20 ஓவர், ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாகத் தொடர்ந்து கேப்டனாக இருந்து வருகிறேன். எனது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு விலகுகிறேன்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாகத் தயாராக இருக்க எனக்கு இடம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் 20 ஓவர் கேப்டனாக இருந்த காலத்தில் அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்டேன். 20 ஓவர் அணிக்காகத் தொடர்ந்து பேட்ஸ்மேனாகச் சிறப்பாக விளையாடுவேன்.

வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் பதவி விலகவுள்ளேன். அதன் பிறகு இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு மட்டும் தொடர்ந்து சிறந்த கேப்டனாக விளங்குவேன். பொறுப்பிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!