இந்தியா

குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர படேல்: இன்று பதவியேற்கிறார்

44views

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் (59) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2016 முதல் அந்த கட்சியின் மூத்த தலைவர் விஜய் ருபானி மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பாஜக எம்எல் ஏக்களின் கூட்டம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மேலிட பொறுப்பாளர் நரேந்திர சிங் தோமர், முதல்வர் பதவிக்கு பூபேந்திர படேலின் பெயரைமுன்மொழிந்தார். பதவி விலகிய விஜய் ருபானி, துணை முதல்வர் நிதின் படேல் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் அவருக்கு ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.

எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத்தை சந்தித்த பூபேந்திர படேல் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்து மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறும்போது, ”குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை பதவியேற்று கொள்வார்” என்று தெரிவித்தார்.

கடந்த 1962 ஜூலை 15-ம் தேதி பிறந்த பூபேந்திர படேல், கட்வார் படிதார் சமாஜ் தலைவராக உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அகமதாபாத்தின் காட்லோடியா தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு 1.17 லட்சம் வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் படேலுக்கு 57,902 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

குஜராத் முன்னாள் முதல்வரும் உத்தர பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் படேலின் தீவிர ஆதரவாளரான பூபேந்திர படேல் ஆர்எஸ்எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையவர். பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர், முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் முதல்முறை எம்எல்ஏவான பூபேந்திர படேல்முதல்வராக தேர்வு செய்யப்பட்டி ருப்பது அனைவரையும் ஆச்சரி யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!