உலகம்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை!”.. நாளை முதல் புதிய கட்டுப்பாடு.. பிரான்ஸ் அறிவிப்பு..!!

49views

பிரான்ஸ் அரசு, நாளையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் நாட்டில் அனுமதி கிடையாது என்று அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, பிரான்ஸ் அமெரிக்காவை, பச்சை பட்டியலிலிருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றி விட்டதாக தெரிவித்திருந்தது. எனவே நாளையிலிருந்து, தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிற்குள் வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இல்லை. அதாவது, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான ஆதாரத்தை காண்பித்து நாட்டிற்குள் வர அனுமதிக்கப்படுகிறார்கள். அதிலும், அஸ்ட்ராஜெனகா, மாடர்னா, பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு தான் அனுமதி வழங்கப்படுகிறது.

தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்கள், அத்தியாவசியமான காரணங்களுக்கு பிரான்ஸ் நாட்டிற்கு வர வேண்டுமென்றால், அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும். அதன் பின்பு, நாட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!