இந்தியா

கட்டுமான பணிகள் தீவிரம்.. 2023 இறுதியில் திட்டமிட்டப்படி அயோத்தி ராமர் கோயில் திறப்பு.. பா.ஜ.க.வினர் உற்சாகம்

65views

திட்டமிட்டப்படி 2023ல் இறுதிக்குள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கும் வகையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுமான வேகமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்துக்களின் கனவான ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமையில் நடைபெற்று வருகிறது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகள் நடைபெற்றது மற்றும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து அங்கு ராமா் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 27 முதல் 29ம் தேதி நடந்தது. 2023ம் ஆண்டு இறுதிக்குள் பக்தர்கள் தெய்வத்தை தரிசிக்க அனுமதிக்கும் திட்டத்தின்படி, கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 டிசம்பருக்குள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும். எனினும் கோயில் வளாகம் கட்டுமானம் 2025க்குள் முடிவடையும் என்று அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.

2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டால், அது பா.ஜ.க.வுக்கு தேர்தலில் பெரிய ஆயுதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ராமர் கோயில் திறப்பு விழாவை பா.ஜ.க.வினர் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!