நிகழ்வு

தூத்துக்குடியில் வ.உ.சி நிகழ்வு

170views
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த தின துவக்0க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற்ற விழாவில் மேதகு டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன், (தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் வ. உ. சி யின் கொள்ளுப்பேத்தி திருமதி. மரகதவல்லி பழனியப்பன், வ. உ. சி கல்விக் கழக செயலர் APCV சொக்கலிங்கம், பழரசம் பா.விநாயகமூர்த்தி , விவேகம் G. ரமேஷ் மற்றும் TR தமிழரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் இராகவேந்திரன் நெறியாள்கையில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் விசயநம்பி -வ. உ. சி யும் திருக்குறளும், தோழர் இரா. விஷ்வா -வ.உ சி யும் இலக்கியமும், தோழர் ஆர்த்தி -வ. உ. சி யும் தொழிலாளர் உரிமையும், தோழர் மகிழவன் -வ. உ. சி யும் சுதேசியமும், தோழர் ஆனந்தி வ. உ.சி யும் சிறையும் என்ற தலைப்புகளில் கருத்துரை வழங்கினார்கள்.

 எழுத்தாளர் ஜோல்னா ஜவஹர் தொடக்கவுரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளை விழாக் குழுத்தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் செயலர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!