349views
வ. உ. சி 150 ஆவது பிறந்த தின துவக்க விழாவை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் , புதுச்சேரி துணை ஆளுநர் திருமிகு. தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் ஓட்டப்பிடாரம் வ.உ.சி வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஆளுநர் அவர்களை வ. உ. சி அவர்களின் கொள்ளுப்பேத்தி திருமதி. மரகதவல்லி பழனியப்பன் மற்றும் எழுத்தாளர் ஜோல்னா ஜவஹர் வரவேற்று சிறப்பு செய்தனர். வ.உ.சி இளைஞர் மன்றத்தின் சார்பில் ஆவுடையப்பன் மற்றும் திருப்பதி வ. உ.சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.





