தாய்லாந்து நாடாளுமன்றத்தில் பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா மீது சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத் தீா்மானத்தில் அவா் வெற்றி பெற்றாா்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
தாய்லாத்தில் கரோனா விவகாரத்தை பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா சரியான முறையில் கையாளவில்லை என்று எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன. இந்தச் சூழலில், அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்காக ஆளும் கூட்டணிக்குள்ளேயே முயற்சிகள் நடப்பதாக ஊடகங்களில் வதந்தி எழுந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிரயுதுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. இதில், தீா்மானத்துக்கு ஆதரவாக 208 வாக்குகளும் எதிராக 264 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, பிரயுத் சான்-ஓச்சாவின் பதவி தப்பியது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.