உலகம் முழுவதும் தற்போது கொரோனா காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அதே வேளையில் பருவநிலை மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதனால் உலகின் வெப்பநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாக வானயியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாற்றங்கள் அடிக்கடி உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான வெப்பம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த பேரழிவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 5 மடங்கு அளவு அதிகரித்து வருகின்றன எனவும், இதன் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தகவலை ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு உறுதி செய்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த மாற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 91 சதவீதத்திற்கும் அதிகமானவை வளரும் நாடுகளில் நிகழ்ந்து வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 3.64 டிரில்லியன் டாலர்
ஐ.நா. சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 1979-2019 வரை நிகழ்ந்த சுமார் 11,000 பேரழிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மிக அதிகமாக 3 லட்சம் உயிரிழப்புக்களை உருவாக்கிய எத்தியோப்பியாவின் 1983 வறட்சியே முதன்மை பெறுகிறது. இதனையடுத்து 2005ல் தாக்கிய கத்ரினா புயல் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள் 163.61 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பெருகி வரும் வாகனங்கள், தொழிற்சாலை புகைகள் , இயற்கை வளங்கள் அழித்தல் இவற்றால் புவி வெப்பமடைந்து வருகிறது. இதனால் தீவிர வானிலை மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.