விமர்சனம்

தி ப்ரெடிவின்னர் – ஒரு திரைக்கண்ணோட்டம்

124views
டெபோரா எல்லிஸ் எழுதி 2000ஆம் ஆண்டு வெளிவந்த தி ப்ரெடிவின்னர்ர் நாவலை தழுவி நோரா டிஒமே இயக்கிய செப்டம்பர் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏஞ்சலினா ஜோலி.
தலிபான்களால் பொய் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தன் தந்தையை காப்பாற்றுவதற்காகவும், தனது குடும்பத்தை பராமரிக்கவும் பார்வானா தனது தலைமுடியை வெட்டிக்கொண்டு ஒரு பையனைப் போல ஆடை அணிந்துகொண்டு மேற்கொள்ளும் முயற்சிகளைப்பற்றி கூறுகிறது இந்தத் திரைப்படம்.
போக்ளோரிக் பாண்டஸி சாயலை சோசியல் ரியலிசத்தில் அமைத்திருப்பதால் இந்த திரைப்படம் 2001ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் இருந்த நிலையற்ற அரசியல் , நரகமயமான சூழலையும் எதார்த்தமாக காட்டுகிறது.
ப்ரெடிவின்னர் ஒரு இருண்ட சந்தை வளாகத்திலிருந்து தொடங்குகிறது. 11 வயதான பர்வானாவையும்
போரில் கால் இழந்த பள்ளி ஆசிரியரும் கதைசொல்லியுமான அவளது தந்தை நூருல்லாஹ் (baba) பாபா சந்தை தெருவில் நாம் சந்திக்கிறோம்.அவர்கள் ஏழ்மையின் காரணத்தால் உணவுக்காக பணம் திரட்ட குடும்ப உடைமைகளை விற்க முயற்சி செய்கிறார்கள். அந்த சூழலிலும் பர்வானாவின் தந்தை எல்லாவற்றையும் இழந்தாலும் நம்மிடம் கதைகளும் நூல்களும் உள்ளது அதை யாரும் பறிக்க முடியாது என்பதை நினைவூட்டி கொண்டே இருந்தார்.
அன்று இரவு உணவின் போது, தலிபானின் ஒரு கொந்தளிப்பான இளம் உறுப்பினர் இட்ரீஸ், சந்தையில் இருவரும் பொருட்களை விற்கும்போது அவர் முன்பு அவனை அவமானப்படுத்தியதாக நினைத்துகொண்டு அவன் தன் தலிபான் கூட்டாளிகளை கூட்டிக்கொண்டு வந்த் அநியாயமாக பர்வானாவின் தந்தையை கைது செய்கிறான்.
ஆண் உறவினர் இல்லாமல் பெண்கள் வெளியே செல்வதை தலிபான் தடை செய்ததால், பார்வனாவின் குடும்பம் தங்களை ஆதரிப்பாரற்று தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பர்வானா சந்தைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்க முயற்சி செய்கிறாள், அவளுடன் ஆண் துணை இல்லை என்பதால் பொருட்களை விற்க கடைக்காரர்கள் மறுப்பு தெரிவிக்க , தன் open தலை முடியை வெட்டிக்கொண்டு ஒரு ஆண்மகனை போல வேடமிட்டு கொண்டு சந்தைக்கு சென்று பொருட்களை வாங்க முயற்சி செய்கிறாள் அவளது அந்த முயற்சி பலனளிக்க, ஆண்மகனைப் போல வேடமிட்டு தனக்கு ஆத்திஸ் என்று பெயர் சூட்டிக்கொண்டு தன் குடும்பத்திற்காக சிறு வேலைகள் செய்து பணம் திரட்ட தினமும் வெளியே செல்ல ஆரம்பிக்கிறாள்.
தன்னை போலவே தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக ஆண்மகனை போல உடையணிந்து தெருக்களில் வேலை செய்யும் தனது பள்ளிக்கூட தோழியான ஷசியாவை சந்திக்கிறாள் பர்வானா.
லஞ்சம் கொடுத்தால் உனது தந்தையை விடுதலை செய்து விடுவார்கள் என்று
ஷசியா ஆலோசனை கூற ஷசியாவின் ஆலோசனை பேரில் சிறைச்சாலை சென்று அங்கு உள்ள ஒரு சிறைகாவலர் ஒருவரிடம் தன்னிடம் உள்ள சிறிது பணத்தை லஞ்சமாக கொடுக்க முயற்சி செய்கிறாள், அந்த காவலர் அதை வாங்க மறுத்து பர்வானாவை விரட்டிவிடுகிறார் .
பெரிய அளவிலான ஒரு லஞ்சத்தை கொடுக்க பர்வான தனது தோழி ஷசியாவுடன் சேர்ந்து கொண்டு கடிமான வேலைகளை செய்கிறாள்.
இதற்கிடையில், பர்வானாவின் அம்மா ஃபட்டேமா மஜாரில் உள்ள தனது உறவினருக்கு கடிதம் எழுதுகிறார்.
தங்குமிடம் மற்றும் பாதுகாப்பிற்கு ஈடாக தனது இளைய உறவினர்களில் ஒருவருக்கு தனது மூத்த மகளான சோரயாவை வழங்குவதாக.
பர்வானா தனது தந்தை கைது செய்யப்பட்டபோது இட்ரீஸுடன் இருந்த ரசாக்கையும் சந்திக்கிறாள் , ரசாக் கல்வியறிவு அற்றவர் அவர் தனக்கு வந்த ஒரு கடிதத்தை படிகும் படியாக ஆத்திஸிடம்(பர்வான்) கொடுக்கிறார்
திருமணத்திற்கு செல்லும் வழியில் அவரது மனைவி ஹாலா ஒரு சுரங்கத்தில் கொல்லப்பட்டதை வெளிப்படுத்தும் கடிதம் அது.
ரசாக் ஆத்திஸிடம்(பார்வான) எழுத படிக்க கற்று கொள்ள தினமும் வர அவர்கள் இருவருக்கிடையே நட்பு மலர்கிறது.
பர்வானா ஒரு நாள் ரசாக்கிடம் தான் நூருல்லாஹ்வின் மகள் என்றும் அவரை சிறையிலிருந்து காப்பாற்ற உதவுமாறு கேட்கிறாள். ரசாக்கும் உதவ ஒத்து கொள்கிறார், ரசாக்கின் சகோதரர் ஒருவர் அந்த சிறையில் காவலராக இருப்பதாகவும் அவரிடம் தான் அனுப்பியதாக கூறினால் அவர் உன் தந்தையை காண உதவுவார் என்று கூறி அனுப்புகிறார்.
பர்வானா வீடு திரும்பியதும், ஃபட்டேமா அவளிடம் அபாயகரமான விளையாட்டை நிறுத்துமாறு கெஞ்சுகிறாள், அவளுடைய உறவினர்கள் சோராயாவை ஏற்றுக்கொண்டதாகவும், மறுநாள் அவர்கள் அழைத்து செல்ல அவர்கள் வருகிறார்கள் என்று அவளிடம் சொன்னாள்.
பர்வானா சிறைக்கு சென்று தன் தந்தையிடம் தங்கள் எங்கு செல்கிறோம் என்று கூற அனுமதிக்குமாறு ஒரு நிபந்தனையுடன் அதை ஏற்று கொள்கிறாள்.
மறுநாள் பர்வானா தன் தந்தையை சந்திக்க சிறைக்கு செல்கிறாள் , பர்வானா விட்டை விட்டு கிளம்பிய பிறகு , ஃபட்டேமாவின் உறவினர் வந்து ஃபட்டேமாவையும் , சோரயாவை மற்றும் சாக்கியையும் கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறார், ஆப்கான் யுத்தம் ஆரம்பம் ஆகிறது.
இயக்குநர் நோரா ட்வோமி மற்றும் ஐரிஷ் நிறுவனமான கார்டூன் சலூனை சேர்ந்த அவரது குழுவினரும் அனிமேஷன் காட்சிகளில் ஆப்கான் மக்களின் துயரங்களை மிகக் கச்சிதமாக விவரித்துள்ளார்.
பர்வானா தனது தவழும் தம்பி சாக்கிக்கு கூறும் கதை
அதில் வரும் சிறுவன் தனது கிராமத்திற்கு செழிப்பை மீண்டும் கொண்டுவர பலவிதமான அச்சங்களை எதிர்கொள்கிறான். இந்த உருக்கமான கதை மிருகத்தனமான யதார்த்தங்களுக்கு ஒரு தொடர்ச்சியான வர்ணனையை வழங்கினாலும்,இது வாழ்க்கையின் வேதனைகளிலிருந்து வசதியான அடைக்கலமாகவும் கலையின் கொண்டாட்டமாகவும் செயல்படுகிறது.
பர்வானா ‘நான் இப்பொழுது ஆண் பிள்ளை வாருங்கள் அம்மா ஜன் அப்பாவை சிறையிலிருந்து அழைத்து வரலாம் ‘ என்று அழைக்கிறாள் அதற்கு அவளது அம்மா அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று கூறும்பொழுது அவள் குழந்தைக்கே உரிய பாணியில் கோபித்துக்கொண்டு வெளியேறும் காட்சிகளில் குழதைக்கு உண்டான கண்ணோட்டத்தில் கதை நகர்வதை அழகாக இயக்குனர் காண்பித்திருப்பார், பர்வானா கோபித்துக்கொண்டு வெளியே வந்து தெருவில் இறங்கி வரும்பொழுது , தலிபான்கள் ஒரு அம்மாவையும் பெண்பிள்ளையையும் ஆண் துணை இல்லாமல் என் வெளியே வந்தீர்கள் என்று அவர்களின் வீட்டின் வாசலில் வைத்தே அடிக்கும் பொழுது
பர்வானா ஸ்டாப் ட் ஸ்டாப் ட் என்று குறைவான சத்தத்தில் கூறும்பொழுது. பெண்கள் ஏன் ஆயுதம் ஏந்தி எதிர்க்கக் கூடாது என்ற உணர்ச்சியும் , சுதந்திரம் என்பது எல்லா பாலினத்தினருக்கும் பொதுவானது இதை புரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
தீ பிரட்வின்னர் மறுபடியும் இப்பொழுது ஆப்கான் மக்கள் படும் துயரங்களை கண்முன் நிறுத்துகிறது.
  • ஹென்றி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!