விளையாட்டு

பாராலிம்பிக் போட்டி: டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பவினா படேல்- தங்கம் நிச்சயம் !!

56views

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினா படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார். தங்கம் வெல்ல முனைப்பு காட்டி வருகிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய வீரர், வீரங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டியில் செர்பியா வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து இன்று காலை அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய வீராங்கனை பவினா படேல் சீன வீராங்கனை ஜாங்க் மியாவை எதிர்க்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பவினா படேல் 3-2 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனை ஜாங்க் மியாவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பவினா படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் அவர் வெள்ளியை உறுதி செய்த நிலையில் தங்கம் வெல்வதை உறுதியாக கொண்டுள்ளார். இதனால் இந்தியாவுக்கு ஒரு தங்கப்பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெற்றி குறித்த பேசிய வீராங்கனை பவினா படேல்,நான் என்னுடைய 100 சதவிகிதத்தை கொடுத்து விளையாடுகிறேன். மனதளவில் நான் இறுதிப்போட்டிக்கு தயாராக உள்ளேன் என உற்சாகத்துடன் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!