இந்தியா

ஒரே நாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய இந்தியா! பிரதமர் மோடி, அமித்ஷா பாராட்டு !

43views

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கடந்த 17ம் தேதி 88 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

இந்த சாதனை தற்போது நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 1 கோடி மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரே நாளில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டுவது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நடத்துபவர்களுக்கும் பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை புதிய இந்தியாவின் வலுவான மற்றும் மகத்தான ஆற்றலின் பிரதிபலிப்பாகும். பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்திய ஒரு தொலைநோக்கு மற்றும் விடாமுயற்சியுள்ள தலைமைத்துவத்துடன் கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதில் ஒரு நாடு எவ்வாறு முன்னுதாரணமாக இருக்கும் என்பதை உலகிற்கு காட்டியுள்ளது. இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!