இந்தியாசெய்திகள்

ரயில்வேக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு – மத்திய அமைச்சர் தகவல்

46views

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வே துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னாவில் பாலம் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரயில்வேதுறை இணையமைச்சர் ராவ்சாகேப் தான்வே கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பயணிகள் ரயில் எப்போதுமே இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது. டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதால் நாங்கள் அதைச் செய்யமுடி யாது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வே துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

சரக்கு ரயில்கள்தான் நல்ல வருமானம் தருகின்றன. கொரோனா பெருந் தொற்று காலத்தில், இந்த ரயில்கள் சரக்கு போக்குவரத்திலும், மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதிலும், முக்கிய பங்காற்றின.

மும்பை-நாக்பூர் விரைவு தடத்தில், புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். இது மக்களுக்கு தேவையானது. இப்போது ரயில்வே துறை, அர்ப்பணிக்கப்பட்ட மேற்கு சரக்கு வழித்தட திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இது நவி மும்பையை டெல்லியுடன் இணைக்கும்’ இவ்வாறு கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!