செய்திகள்தொழில்நுட்பம்

Google Pixel 5a | கூகுள் வெளியிடும் 5ஜி போன்.. எல்லாம் இருக்கு.. ஆனால்…?

98views

கூகுள் நிறுவனம் தனது Pixel 4a மாடலை கடந்த வருடம் அறிமுகம் செய்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற அந்த மாடல் பட்ஜெட் விலையால் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. கவர்ச்சிகரமான சார்ப்ட்வேரும் வாடிக்கையாளர்களை கவர முக்கிய காரணமாக இருந்தது. Pixel 4a இரு வகையான மாடல்களாக வெளியானது. ஒன்று 4ஜி மற்றொன்று 5ஜி. இந்த நிலையில் அடுத்த ஸ்மார்ட்போன் உலகம் 5ஜி என்ற நிலை வந்துவிட்டதால் கூகுள் தங்களுடைய போன் மாடலில் அப்டேட்டை கொண்டு வரவுள்ளது. அதன்படி 4ஜி மாடலை தவிர்க்கும் கூகுள் Pixel 5a (5G) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. சில மாதங்களாக இது தொடர்பாக தகவல்கள் வெளிவந்தாலும் உலகளவில் ஏற்பட்ட செல்போன் சிப் பற்றாக்குறையால் இந்த மாடல் வெளியாவதில் குழப்பம் இருந்தது. இந்நிலையில் இப்போது Pixel 5a (5G) மாடல் வெளியீடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Pixel 5a (5G)சிறப்பம்சங்கள்:

இந்த மாடலை பொருத்தவரை 156.2 x 73.2 x 8.8mm அளவு கொண்டதாகவும். 183 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கிறது. மெடல் யுனிபாடி வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல் தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது.

டிஸ்பிளேவை பொருத்தவரை 6.34 இன்ச் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஹோல் பஞ்ச் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 வகை ஆகும். இதன் ரெசொலேஷன் 2400 x 1080 ஆகவுள்ளது. இந்த மாடலுக்கு Qualcomm Snapdragon 765G வகை ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்தவரை பின்பக்கம் 12.2 மெகாபிக்ஸல் மற்றும் 16 மெகாபிக்ஸல் கொண்ட இரு வகையான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன் பக்க கேமராவை பொருத்தவரை 8 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. டைப் சி USB 3.1 வகையும், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 கொடுக்கப்பட்டுள்ள Google Pixel 5a (5G) மாடலுக்கு 4,680mAh வகை பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 18வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு வையர் இணைப்பு இல்லாத சார்ஜர் கொடுக்கப்படவில்லை. ரேம் மற்றும் மெமரியை கணக்கிட்டால் 6ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி கொண்டதாக இருக்கிறது.

Google Pixel 5a (5G) மாடல் புதிய வெளியீடு என கூகுள் அறிவித்திருந்தாலும் கடந்த வருடம் வெளியாகி இருந்த Pixel 4a 5ஜி மாடலைப் போலவே இருக்கிறது. அதிக வித்தியாசங்கள் ஏதும் இல்லாத நிலையில் சிறு சிறு அப்டேட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது வரும் ஸ்மார்ட்போன்கள் 30 வாட்ஸுக்கும் அதிகமான சார்ஜரை கொண்டுள்ளன. அதோடு ஒப்பீடு செய்யும் போது கூகுள் Pixel 5a (5G)பின் தங்கியே இருக்கிறது.

முக்கியமாக இந்த மாடல் இப்போதைக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மட்டுமே வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் சிப் பற்றாக்குறை காரணமாக மற்ற நாடுகளில் வெளியாவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. அமெரிக்கா, ஜப்பானில் உள்ள வரவேற்புக்கு ஏற்ப இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!