இந்தியாசெய்திகள்

எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார்: முப்படை தளபதி பிபின் ராவத் தகவல்

58views

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முப்படை தளபதி பிபின் ராவத்பேசியதாவது:

நமக்கு பிரதமர் மோடி சிலவழிகாட்டுதல்களை வழங்கிஉள்ளார். நாட்டின் பொருளாதாரம் மீது நாம் கவனம் செலுத்துவதுடன் மனிதவள மேம்பாடுகுறித்து சிந்திக்க வேண்டும், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை நோக்கி முன்னேற வேண்டும்.

ஆயுதப் படைகளை நவீனப்படுத்த பிரதமர் மோடிஉத்தரவிட்டுள்ளார். அவற்றின் போர்த்திறனை மேலும் அதிகரிப்பது மிகவும் அவசியம்.

காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதில், ஆயுதப் படைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார்நிலையில் உள்ளன. முப்படைகளுக்கு இடையிலான கூட்டுத்தன்மையை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் ஒட்டுமொத்த போர்த்திறனை மேம்படுத்தும். இவ்வாறு பிபின் ராவத் கூறினார். விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் பங்களிப்பையும் பிபின் ராவத் நினைவுகூர்ந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!