507
கிழக்கு முகப்பேரில் சுகி’ஸ் பார்லர் வளாகத்தில் கடந்த வாரம் ஓவிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது. கண்ணாடியில் வரைந்த ஓவியங்கள், கான்வாஸ் ஓவியங்கள், அக்ரலிக் ஓவியங்கள் என பல்வேறு விதங்களில் ஓவியங்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. தெய்வங்களின் உருவங்கள், பறவைகள் , இயற்கைக் காட்சிகள் என பலதரப்பட்ட வடிவங்களில் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நண்பர்கள் ஓவியக்கலைஞர்கள் உறவினர்கள் பலர் இந்த நிகழ்சியில் கலந்துக் கொண்டனர்.
இந்த ஓவியக்கூடம் தனது முதல் தொடக்கம் எனவும், வரும் காலத்தில் ஓவியத்துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முழு அர்ப்பணிப்புடன் தான் இயங்குவதாகவும் தெரிவித்தார் ஓவியர் ராஜலக்ஷ்மி.