நெதர்லாந்து ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் தயாராகியுள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் முக்கிய பிரிவில் விருது வென்றுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கூழாங்கல்’. திரையரங்குகளில் இன்னும் வெளியிடப்படாத இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்ந்த நெதர்லாந்து ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதன்படி எதிர்பார்த்தபடியே ‘கூழாங்கல்’ படம் சர்வதேசளவில் சிறந்த படத்துக்கான டைகர் விருதை வென்றது.
நெதர்லாந்து ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு தமிழ் படம் விருது வெல்வது இதுவே முதல்முறை. கொரோனா காரணமாக இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் கலந்துகொள்ள முடியாமல் போனது.
அதனால் கூழாங்கல் திரைப்படம் வென்ற சிறந்த படத்துக்கான டைகர் உருவம் பொறித்த விருது சென்னை வந்தடைந்துள்ளது. அதனுடன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.