இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற காரைக்கால் மாணவர்க்கு இன்று 09/08/2021 அய்மான் சங்கம் பாராட்டு.
245views
அபுதாபி :
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து காரைக்கால் மாணவர் இம்ரான் சாதிக் சான்றிதழ் பெற்றுள்ளார்.
துபாயில் பிறந்த இந்த மாணவர் தற்போது காரைக்கால் குட் செபர்டு ஆங்கில பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்த மாணவருக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் ஹெச் எம் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று 09/08/2021 அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் மாணவரின் தந்தை அஜ்மல் ஹமீத் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள் மேலும் மாணவர் இம்ரான் சாதிக் அவர்கள் விண்வெளித்துறையில் எதிர்காலத்தில் சாதனை படைக்க அய்மான் சங்கத்தின் அனைத்து நிர்வாகியின் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.





