இந்தியா

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியீடு; பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி: வாக்குச்சீட்டு முறை என்பதால் எண்ணும் பணி தாமதம்

53views

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது. மேலும், அதிகப்படியான இடங்களில் முன் னிலை வகிக்கிறது. வாக்குச்சீட்டு முறை என்பதால் எண்ணும் பணி தாமத மாகியுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத் தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங் களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங் கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய துமே ஆங்காங்கே சில பகுதிகளில் குழப்பங்கள் நிலவின. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், தென்காசி மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தாமத மாகவே தொடங்கியது. தாம்பரத்தில், வேட்பாளர்களின் முகவர்கள் நிற்கும் பகுதி மிகவும் குறுகியதாக இருந்ததால் சமூக இடைவெளி பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் அம்பா சமுத்திரம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, விழுப்புரம் மாவட்டம் மரக் காணம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உள்ளிட்டபகுதிகளில் வாக்குப்பெட்டியின் சாவி தொலைந்த தால், பெட்டிகள் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.

கரூர் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக, அதிமுகவினர் இடை யில் மோதல் ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கை தாமதமானது. பரங்கி மலை ஒன்றியத்துக்கான தேர்தலில் பதிவான வாக்குக்கும், பதிவேட்டில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்ததால் அங்கும் வாக்கு எண் ணிக்கை தாமதமானது.

தபால் வாக்குகளுடன் இணைத்தே வாக்குச்சீட்டுக்களும் எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கத் தொடங்கினர். மாலை, 6 மணியளவில் வெற்றி மற்றும் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியது.

மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மாலை 7 மணி நிலவரப்படி வெளியான 4 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுகவே கைப்பற்றியிருந்தது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 102, அதிமுக 12, காங்கிரஸ் 4 இடங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகியவை தலா ஒரு இடத்தையும் மற்றவை 15 இடங்களையும் கைப்பற்றின. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 514 பேரும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 4,546 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்டதால், வாக்குகள் பிரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. இதனால், இரவைத் தொடர்ந்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்கப்பட்டு, பலர் களம் கண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் கருப்படிதட்டடை கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பிரபு 65 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்தவர் 64 வாக்குகளும் 3-ம் இடத்தை பெற்றவர் 63 வாக்குகளும் பெற்றனர். மறு எண்ணிக்கையிலும் பிரபுவே வெற்றி பெற்றார்.

மொத்தமுள்ள 153 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 8 இடங்களையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. இதேபோல் 1,421 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு முடிவு தெரிந்த 266 இடங்களில் திமுக- 198, அதிமுக – 28, காங்கிரஸ்- 7, இந்திய கம்யூனிஸ்ட்- 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 2, தேமுதிக – 1 பாமக உள்ளிட்ட மற்றவை 29 இடங்களை கைப்பற்றின.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!