தமிழகம்

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

68views

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.மேலும்,இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை .
இதுகுறித்து ,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்

நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020”, “வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020′”, “அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் |தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் 26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.

இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை – ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், “இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி – இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்” என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படடது.

எனவே டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியதை அடுத்தும்,பிரதமராக மோடி பதவியேற்று 7ம் ஆண்டு தினத்தை இன்று மே 26ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடிக்கப்போவதாக விவசாய சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!