செய்திகள்தமிழகம்

+2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

61views

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில முதலமைச்சர் அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவியதையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்க மத்தியஅரசு கேட்டுக்கொண்டது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த உத்தரவு குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியாமல், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கவலை நிலவுகிறது அதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பாக தோன்றவில்லை என கூறியதால். CBSE 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் தேர்வை ரத்த செய்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களில் உடல் நலனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்திலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!