விளையாட்டு

18 ஆண்டுகால கிரிக்கெட் கெரியருக்கு முற்றுப்புள்ளி வைத்த முகமது ஹஃபீஸ்! ஓய்வு அறிவித்தார்

46views

பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரரான முகமது ஹஃபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக 2003ம் ஆண்டு அறிமுகமானார். பேட்டிங் மட்டுமல்லாது ஸ்பின் பவுலிங்கும் சிறப்பாக வீசக்கூடிய சிறந்த ஆல்ரவுண்டர் முகமது ஹஃபீஸ்.

பாகிஸ்தான் அணிக்காக 18 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவந்த ஹஃபீஸ், 55 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3652 ரன்களையும், 218 ஒருநாள் போட்டிகளில் 6614 ரன்களையும் குவித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடர் வரை ஆடிய ஹஃபீஸ், 115 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 2440 ரன்களை குவித்துள்ளார்.

2018ம் ஆண்டுக்கு பிறகு ஹஃபீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவில்லை. 2019ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் ஆடிய ஹஃபீஸ், இரண்டரை ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஆடவில்லை. டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவந்த ஹஃபீஸ், தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

41 வயதான முகமது  ஹஃபீஸ், பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் ஆடியுள்ளார். பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான ஹஃபீஸ், அவரது சர்வதேச கிரிக்கெட் கெரியருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!