67
நீண்ட தூரம் பயணித்து இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் வெற்றி கண்டுள்ளது வட கொரியா. ‘மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அஸ்திரம் இது’ என அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
தகவல்களின்படி இலக்குகளை தாக்குவதற்கு முன்னதாக 1500 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ஏவுகணை பயணிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. வட கொரியாவுக்கு அண்டை நாடான ஜப்பானின் பெரும் பகுதி நிலத்தை இந்த ஏவுகணை தாக்கும் வல்லமை உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த சோதனை அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளது அமெரிக்கா.