தமிழகம்

மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்து கை, கால்கள், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் அரசு பொதுத்தேர்வு எழுதி 543 மதிப்பெண் பெற்று சாதனை

66views
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்த நிலையில்., திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒ.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் – தேவி தம்பதியினரின் மூத்த மகள் உமாமகேஸ்வரி திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு உயிர் கணிதம் (Bio Maths) பாடப்பிரிவு பயின்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வீட்டின் அருகில் வசித்து வரும் உறவினரின் வீட்டு மாடி படியில் துவைத்த துணிகளை காய வைத்து பின்னர் அதை எடுக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக மாடிப்படியில் தவறி கீழே விழுந்தார். இதில் மாணவியின் இரண்டு கால்களும்., இடது கை மற்றும் முதுகு தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இந்நிலையில் மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வை மாணவி தேர்வு எழுத வேண்டும் என தனது விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்து அதற்கு அவர் குடும்பத்தாரும்., சமூக ஆர்வலர்களும் உதவி புரிந்தனர். தொடர்ந்து., மாணவியரின் நிலையை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் எடுத்துக் கூறிய பிறகு தேர்வுத் துறைக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்து உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை செய்து அனைத்து தேர்வுகளையும் எழுதி இருந்தார். இன்று பொதுத்தேர்வு முடிவுகள் காலை வெளியானதை தொடர்ந்து பல்வேறு மாணவ மாணவிகள் சாதனை புரிந்து வந்தனர்.
கை கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்ற நிலையிலும் தனது விடாமுயற்சியால் தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் உமாமகேஸ்வரி 600 க்கு 543 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தனது கடின உழைப்பால் பொது தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணத்துடனும் மருத்துவராக வேண்டும் என்பதே தனது கனவாக இருந்து வருவதால் காயம் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுவதற்கு முன் மாடியில் இருந்து தவறி விழுந்து காயம் ஏதும் ஏற்படாமல் இருந்திருந்தால் 590 க்கும் மேல் மதிப்பெண் எடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் பாடப்பிரிவில் மதிப்பெண் குறைவாக வந்திருப்பதால் அதனை ரீவல்யூஷன் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். தற்போது திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் மூன்றாம் இடத்தை பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும்., நேற்று நீட் தேர்வு எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அதில் நல்ல மதிப்பெண் பெறுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!