உலகம்

1000 ஆண்டுகள் பழமையான மாயன் படகு கண்டுபிடிப்பு… நீருக்குள் அப்படியே இருந்த ஆச்சரியம்!!

82views

தென் மெக்சிகோவில் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மாயா ரயில் எனப்படும் புதிய சுற்றுலா ரயில் பாதையின் கட்டுமானப் பணியின் போது இந்த அரிய கண்டுபிடிப்பு கிடைத்தது. படகு, நீரினுள் சிதிலமடையாமல் அப்படியே இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக கருதப்படும் மாயன் சமுதாய மக்களின் நாகரிகத்தை பிரதிபலிக்கும் கலைப் பொருட்கள், அவர்கள் பயன்படுத்திய ஜாடிகள் மற்றும் குகை ஓவியங்கள் ஆகியவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அவ்வபோது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

5 அடிக்கு மேல் (1.6 மீ) அளவு கொண்ட இந்தப் படகு, பாழடைந்த மாயன் நகரான சிச்சென் இட்சாவின்அருகில் உள்ள ஒரு நன்னீர் குளத்தில் மூழ்கி, கிட்டத்தட்ட சிதிலமடையாமல் அப்படியே காணப்பட்டது. இந்நிலையில்

இது தண்ணீரை பிரித்தெடுக்க அல்லது சடங்கு செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மெக்ஸிகோவின் பழங்கால நிறுவனம் (இனா) கூறுகிறது.

ஸ்பெயின் இப்பகுதியை கைப்பற்றுவதற்கு முன்பு மாயன் நாகரிகம் செழித்து வளர்ந்தது. அவர்களின் காலத்தில், மாயன்கள் இப்போதைய தெற்கு மெக்சிகோ, குவாத்தமாலா, பெலிஸ் மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய இடங்களில் பெரும் பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ல இந்தப் படகு மாயன் நாகரிகத்தின் பொற்காலத்தின் முடிவில், கி.பி 830-950 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என தேதியிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான், மாயன் நாகரிகம் ஒரு பெரிய அரசியல் சரிவை சந்தித்தது.

மாயா ரயில் எனப்படும் புதிய சுற்றுலா ரயில் பாதையின் கட்டுமானப் பணியின் போது இந்த அரிய கண்டுபிடிப்பு கிடைத்தது. கரீபியன் பகுதிகளை புராதன தொல்பொருள் தளங்களுடன் இணைக்கும் வகையில் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் அறிவித்த சுற்றுலாத் திட்டமான மாயா ரயில்களுக்கான பணிகளை மேற்கொண்ட போது இது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, குவாத்தமாலா மற்றும் பெலிஸில் இந்தப் படகுகளின் துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன.

இந்நிலையில் இந்தப் படகு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இதன் முப்பரிமாண மாதிரி உருவாக்கப்படும் என்றும் பிரதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!