உலகம்

ஹவுதி ஏவுகணைகள் தகர்ப்பு; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிரடி

93views

ஏமன் நாட்டின் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஏவிய இரண்டு ஏவுகணைகளை இடைமறித்துதாக்கி அழித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபு தாபி. இங்கு சமீபத்தில் மூன்று எண்ணெய் ‘டேங்கர்’கள் மற்றும் விமான நிலையம் மீது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.இதில் இங்கு பணியாற்றிய இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட மூவர் பலியாயினர்.இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஆதரவான சவுதி அரேபியா தலைமையிலான விமானப் படை, ஏமன் சிறை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 200 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபு தாபியை தாக்க இரு ஏவுகணைகளை நேற்று ஏவியது.உடனடியாக அந்த ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பியது. அவை ஹவுதியின் இரு ஏவுகணைகளை தாக்கி அழித்தன. அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் பல இடங்களில் விழுந்துள்ளதாகவும், இதனால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றும் ஐக்கியஅரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!