இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ,மகளிர் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான டபிள்யூ.வி.ராமன் நேற்று பேட்டி ஒன்றில் கூறும்போது ,”அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்க வேண்டும் என்றார் .மேலும் பேசிய அவர், “கேப்டன்சிக்கும் வயதுக்கும் தொடர்பு கிடையாது .
கேப்டன் பதவிக்கு அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என உறுதியாக நம்புகிறேன். அதோடு ஆட்டத்தின் போக்கை நன்கு கவனித்து செயல்படக்கூடியவர் .இந்திய அணிக்காக நீண்ட நாள் விளையாடி வருகிறார்” என்று அவர் கூறினார் .இந்நிலையில் இந்திய மகளிர் அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக 38 வயதான மிதாலிராஜ் மற்றும் டி20 அணியின் கேப்டனாக 32 வயதான ஹர்மன்பிரீத் கவுர் இருப்பது குறிப்பிடத்தக்கது.