தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே திடீரென குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு இயக்கப்படாததே இதற்கு காரணம் என்றும், பழுதை சரி செய்யும் பணியில் ஸ்டொலைட் ஆலையின் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஸ்டொலைட் தொழில்நுட்ப குழுவினருடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சோந்த தொழிநுட்ப குழுவினரும் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் சனிக்கிழமை முதல் இஸ்ரோ குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முதல் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
131views
You Might Also Like
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...
வேலூர் அடுத்த விருதம்பட்டியில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை திறந்துவைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்...
வேலூரில் மீண்டும் சதம்
வேலூரில் இன்று வியாழக்கிழமை 100.9 டிகிரி வெய்யில் வாட்டியது.நேற்று முன்தினம் வேலூரில் 100.1 டிகிரி வெய்யில் பதிவானது. இதன் காரணமாக பகலில் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கே.எம். வாரியார்...
வேலூர் அடுத்த புது வசூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா
வேலூர் அடுத்த புது வசூர் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை அளிக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட சமூகநல அலுவலர் உமா,...




