தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறால் ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டுள்ள நிலையில் அதை சரி செய்ய இஸ்ரோ நிபுணர் குழு அங்கு விரைந்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் இதை சரி செய்ய வந்துள்ள இஸ்ரோ நிபுணர் குழு சில ஆலோசனைகளை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு உற்பத்தியை தொடக்கியுள்ளது. இங்கு ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. வியாழக்கிழமை ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை உற்பத்தி நிறுத்தப்பட்டது.