அட்லீ இயக்கும் ஷாரூக்கான் படத்தில் நயன்தாரா நடிக்கிறாரா இல்லையா என்பது உறுதியாகாத நிலையில், அந்த பிரபலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள திரைப்பட நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. தென் கொரியாவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘பிளைண்டு’ என்கிற படம் தமிழில் ‘நெற்றிக்கண்’ என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா, அஜ்மல் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. அவள் படம் மூலம் கவனமீர்த்த மிலிந்த் சோமன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பாக படத்தை தயாரித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். கொரோனாவால் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படுவது முடிவாகவில்லை. அதனால் படத்தை ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்டு 13-ம் தேதி வெளிவருகிறது. ஓடிடி வெளியீட்டு காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஷாரூக்கான் படத்தில் நயன்தாரா நடிக்கும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், வட இந்திய ரசிகர்களிடமும் இப்படம் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.