இந்தியாசெய்திகள்

வேலையிழந்த தொழிலாளருக்கு அரசு பிஎப் தொகை செலுத்தும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

54views

கரோனா ஊரடங்கு நடவடிக்கையால் வேலையிழந்த பணியாளர் களின் பிஎப் பங்களிப்பு தொகையை அடுத்த ஆண்டு (2022) வரை மத்திய அரசு செலுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இபிஎப்ஓ-வில் பதிவு செய்த தொழில் நிறுவனங்களில் வேலை இழந்தவர்களின் பிஎப் தொகை பங்களிப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு இரண்டையும் சேர்த்து மத்திய அரசு செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படும் வரை இந்த பங்களிப்பு தொடரும். அதிகபட்சம் அடுத்த ஆண்டு வரை இது வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

வேலையிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாவட்டத்தில் வேறு பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கிறது. மத்திய அரசின் 16 வகையான தொழில் திட்டங்களின் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களின் எண்ணிக்கையை 2020-ம் ஆண்டு அதிகரித்து அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் கோடி தொகை கரோனா காலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே ஜூன் மாதத்தில் 12.83 லட்சம் பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பணியாளர் பிஎப் நிறுவனம் கூறியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!