இந்தியா

வேட்பாளர்களின் தேர்தல் செலவு; உச்ச வரம்பு உயர்வு

44views

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் வேட்பாளரின் தேர்தல் செலவு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.தலைமை தேர்தல் ஆணைய அறிவிப்பு:பெரிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் செலவுத் தொகைக்கான உச்ச வரம்பு 28 லட்சம் ரூபாயில் இருந்து, 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.

சிறிய மாநிலங்களுக்கு 20 லட்சம் ரூபாயில் இருந்து, 28 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவுக்கு பெரிய மாநிலங்களின் வேட்பாளருக்கு 70 லட்சம் ரூபாயாக இருந்த செலவுத் தொகை உச்ச வரம்பு 90 லட்சம் ரூபாயாகவும், சிறிய மாநிலங்களில் 54 லட்சம் ரூபாயில் இருந்து 75 லட்சம் ரூபாயாகாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!