சினிமாசெய்திகள்

வெந்து தணிந்தது காடு: வைரலாகும் சிம்பு புகைப்படம்; சபாஷ் சொல்லும் நெட்டிசன்கள்

95views

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிகர் சிம்புவின் தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் படத்தின் பெயர் வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டது.

இந்தப் படத்திற்காக சிம்பு உடலைக் கடுமையாக குறைத்திருக்கிறார். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி உடல் எடையை குறைத்திருக்கிறார். உடல் எடை குறைப்பு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படம் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!