தமிழகம்

விவேகானந்தர் நாடு திரும்பிய 125-வது ஆண்டு தினம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

57views

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய சுவாமி விவேகானந்தர், பின்னர் இந்தியா திரும்பிய 125-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விவேகானந்தரின் குழந்தைப் பருவம் மற்றும் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, விவேகானந்தர் இந்தியா வந்த பின்னர் 9 நாட்கள் தங்கியிருந்த தியான அறையில், ஆளுநர் ரவி தியானம் செய்தார்.

இதுகுறித்து ஆளுநர் கூறும்போது, “நாட்டில் உள்ள இளைஞர்கள் விவேகானந்தரின் ‘எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிற்காதே’ என்ற கருத்துகளை அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு நினைவில் வைத்துக்கொண்டு, பின்பற்ற வேண்டும்” என்றார்.

பின்னர், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார், இந்த நிகழ்ச்சிகளில், ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், மேலாளர் சுவாமி தர்மிஷ்தானந்தா, சுவாமி ரகுநாயகானந்தா, சுவாமி இஷாபிரேமானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!