விளையாட்டு

விறுவிறுப்பாக நடைபெறும் சீனா குளிர்கால ஒலிம்பிக் – பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நார்வே!

48views

சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் நார்வே முதலிடம் வகிக்கிறது.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஸ்லோப்ஸ்டைல் எனப்படும் பனியில் சறுக்கிக்கொண்டே பறக்கும் போட்டியில் அமெரிக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல் மற்றம் நிகோலஸ் கோப்பர் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர். ஸ்வீடன் நாட்டின் ஜெஸ்பர் ஜாடர் வெண்கலப்பதக்கம் வென்றார். மைனஸ் 24 டிகிரி குளிரில் இப்போட்டிகள் நடைபெற்றன.

ஆண்கள் ஐஸ் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்து ஸ்லோவாக்கிய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஸ்லோவாக்கியா நெருங்கியுள்ளது

ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் கனடா அணி அதிர்ஷ்டவசமாக வெற்றியை ஈட்டியது. நடப்பு சாம்பியனான ஜப்பானை இறுதிப்போட்டியில் கனடா எதிர்கொண்டது. இதில் இறுதிக்கட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாநா தகாகி தவறி விழ நேர்ந்ததால் கனடா எளிதில் தங்கப்பதக்கம் வென்றது

இதுவரை நடந்துள்ள போட்டிகளில் நார்வே அணி 13 தங்கம் உட்பட 28 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 2ஆவது இடத்திலும் அமெரிக்கா 3ஆவது இடத்திலும் உள்ளன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!