விளையாட்டு

விராட் கோலியின் முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது… ரிக்கி பாண்டிங் கருத்து!

65views

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ராஜினாமா செய்தது கிரிக்கெட் உலகில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐக்கும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு எழுந்து அதன் காரணமாக அவர் டி 20 மற்றும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஒரு நாள் அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டது. இதுகுறித்த சர்ச்சைகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்க, இப்போது டெஸ்ட் அணிக்கு யார் கேப்டன் என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் கோலியின் முடிவு குறித்து தான் எழுதிய பத்தி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. ஏனென்றால் நான் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரப்போவதாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன்சி குறித்து ஆர்வமாக இருந்தார். அதனால் அவர் பதவி விலகியது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. இந்த நிகழ்வு என் கேப்டன்சி காலத்தை நோக்கி என்னை யோசிக்க வைத்தது. நான் ஓரிரு வருடங்கள் அதிகமாக விளையாடி விட்டதாக தோன்றுகிறது. நான் கேப்டன் பொறுபில் இன்னும் முன்பே விலகி இருக்கலாம் என்று தோன்றுகிறது’ எனக் கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!