தமிழகம்

விடிய விடிய மழை.. சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

44views

விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. தியாகராய நகர் துரைசாமி சுரங்கப்பாதை உட்பட சில சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

புழல் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் 11 மணி அளவில் உபரி நீர் திறக்கப்பட இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதால், கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

இதற்கிடையே, சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரே நாளில் 20.செ.மீ அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!