விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக அணி அசத்தல்..!

43views

மாநிலங்களுக்கு இடையிலான பி.சி.சி.ஐ. நடத்தும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தான் விஜய் ஹசாரோ கோப்பை தொடர் இந்த தொடரில் அதிகபட்சமாக தமிழக அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு முறை இறுதிப் போட்டி வரை வந்து தோற்றது.

நடப்பு சீசனின் அரையிறுதி ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழக அணியும், சௌராஷ்டிரா அணியும் மோதின. ரன் குவிப்பு டாஸ் வென்ற தமிழக அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் விஷ்வராஜ் ஜடேஜா 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய செல்டன் ஜாக்சன் 134 ரன்கள் குவிக்க, இறுதியில் அப்ரிட் வசவாடா அரைசதம் கடந்தார். இதனால் 50 ஓவர் முடிவில் சௌராஷ்டிரா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. தமிழக அணி தடுமாற்றம் தமிழக பந்துவீச்சில் கேப்டன் விஜய் சங்கர் 4 விக்கெட்டையும், சிலம்பரசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக இருந்தது.தொடக்க வீரர் ஜெகதீசன் டக் அவுட்டாக, விஜய் சங்கர் 4 ரன்களில் வெளியேறினார். 23 ரன்களுக்கு தமிழக அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பாபா சகோதரர்கள் அப்போது களத்தில் இணைந்த சகோதர ஜோடிகளான பாபா அப்ரஜித் மற்றும் பாபா இந்திரஜித், பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்தரஜித் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய பாபா அப்ரஜித் 122 ரன்கள் விளாசினார்.

தமிழக அணி வெற்றி தமிழக அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.இறுதியில் தமிழக அணி தடுமாறிய போது, வாசிங்டன் சுந்தர் கைதேர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். வழக்கம் போல் ஷாரூக்கான் 11 பந்துகளில் 17 ரன்களும், சாய் கிஷோர் 9 பந்துகளில் 12 ரன்கள் சேர்க்க, தமிழக அணி கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!