விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பையை வென்ற இமாசலபிரதேசம் அணிக்கு ரவிசாஸ்திரி பாராட்டு..!

49views

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான தமிழக அணி, இமாசலபிரதேசத்தை சந்தித்தது. இதில் தமிழக அணியை வீழ்த்தி   இமாசலபிரதேசம் அணி  வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த பேட்டியில், ‘இமாசலபிரதேசம் போன்ற அணிகளில் நட்சத்திர வீரர்கள் கிடையாது. ஆனாலும் விஜய் ஹசாரே கோப்பையை வென்றிருக்கிறது. கட்டுக்கோப்புடன் கடினமாக உழைத்து போட்டியில் ஒரு அணியாக முழு உத்வேகத்துடன் செயல்பட்டால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள்’ என்றார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!