சினிமாசெய்திகள்

விக்ரமின் ‘சீயான் 60’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு..!!

83views

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரமின் 60-வது படம் தயாராகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாததால் தற்காலிகமாக ‘சீயான் 60’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

‘சீயான் 60’ ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது. இதுவொரு கேங்ஸ்டர் படம். விக்ரம் வில்லன் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா, முத்துக்குமார், சனத் ஆகியோரும் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!