செய்திகள்விளையாட்டு

வார்ம்-அப் போட்டியில் ஜார்ஜியாவை 3-0 என்று நொறுக்கிய நெதர்லாந்து

62views

யூரோ கோப்பை 2021 கால்பந்து தொடருக்கான பயிற்சி வார்ம்-அப் போட்டியில் ஜார்ஜியா அணியை நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் நொறுக்கியது.

நெதர்லாந்து வீரர்கள் மெம்பிஸ் தீபே, வவுட் வெகார்ஸ்ட், டீன் ஏஜ் வீரர் ரியான் கிரேவன்பர்ச் ஆகியோர் தலா 1 கோலை அடித்தனர்.

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் மெம்பிஸ் தீபே பெனால்டியை கோலாக மாற்றி நெதர்லாந்துக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால் முதல் பாதியில் ஜார்ஜியா அணி பிரமாதமாக ஆடியது, நெதர்லாந்து கோலை நோக்கி நிறைய ஷாட்களை அடித்து ஆட்டம் காட்டினர். இதனையடுத்து நெதர்லாந்து பாதுகாப்பு அரணை பலப்படுத்த வேண்டியதாயிற்று.

பிறகு 2வது பாதியில்தான் வருவது வரட்டும் என்று பாதுகாப்பு அரணை உடைத்து முன்னேறி ஆடும் உத்தியைக் கடைப்பிடித்து நெதர்லாந்து அணி ஆக்ரோஷம் காட்ட 55வது நிமிடத்தில் வெகார்ஸ்ட் 2வது கோலை அடிக்க பிறகு 76வது நிமிடத்தில் கிரேவன்பர்ச் 3வது கோலை தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். முதல் வார்ம் அப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து 2-2 என்று டிரா செய்ததில் கடும் ஏமாற்றம் அடைந்த நிலையில் இந்த வெற்றி நெதர்லாந்துக்கு ஊக்கமளித்தது. இந்தப் போட்டியில் நெதர்லாந்தின் ஆட்ட உத்தி பண்டிதர்களி விமர்சனத்துக்கு ஆளானது.

ஆட்டம் தொடங்கி 10வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்சில் டம்பிரைஸை ஜார்ஜியா வீரர் பெனால்டி பகுதிக்குள் கீழே தள்ளி விட்டு ஃபவுல் செய்ய பெனால்டி ஷாட்டில் தீபே முதல் கோலை அடித்தார். தீபேயின் 2வது கோல் முயற்சியை ஜார்ஜியாவின் கோல் கீப்பர் கியார்கி லோரியா முழு நீள டைவ் அடித்து தடுத்தார்.

ஜார்ஜியாவும் பயங்கரமாக கடைசியில் முயற்சி செய்தனர், ஒரு சக்தி வாய்ந்த ஷாட் கோல் போஸ்ட்டைத் தாக்கி திரும்பியது, ஆக்ரோஷமான ஆட்டம் ஏதோ நெதர்லாந்து வெற்றியில் முடிந்தது என்று கூறலாமே தவிர நெதர்லாந்து முழு ஆதிக்கம் செலுத்தியதாகக் கூற முடியாது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!