அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் பின்னணி இசையை யுவன்ஷங்கர் ராஜாவுக்கு பதிலாக, இசையமைப்பாளர் ஜிப்ரான் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படும் நிலையில் இது குறித்து சினி உலகம் யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கொடுத்த நேர்காணலின் சில துணுக்குகளை இங்கு பார்க்கலாம்.
இது குறித்து அவர் பேசும் போது ‘ ஆமா அப்படி ஒரு தகவல் இண்டஸ்ரியில பேசப்பட்டுட்டு இருக்கு. அது என்னன்னா வலிமை படத்தோட பின்னணி இசையை யுவன் இசையமைக்கல அப்படிங்கிறது. இது சம்பந்தமா நான் விசாரிச்சப்ப, அந்தத் தகவல் உண்மை அப்படிங்கிறது தெரிய வந்துச்சு.
இதுக்கு காரணமா என்ன சொல்லப்படுது அப்படினா யுவனோட பின்னணி இசை ஹெச்.வினோத்துக்கு பிடிக்கலையாம். அவர் இத விட பெட்டரா கேட்டுருக்காரு.. ஆனா அதுக்கு யுவன் தரப்புல இருந்து சரியான கோப்ரேஷன் இல்லணு சொல்லப்படுது. அதைத் தொடர்ந்துதான் அது ஜிப்ரான் கைக்கு போயிருக்கிறதாம். படம் பார்க்கும் போது நமக்கே அது தெரிய வரும்.
யுவன்கிட்ட இருக்குற சிக்கல் என்ன அப்படினா அவர் மிகத் திறமையான இசையமைப்பாளர் அப்படிங்கிறதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்ல. ஆனா அவர் கூட வொர்க் பண்ற இயக்குநர்களே அவர ரீச் பண்ண முடியாத சூழல்ல அவர் இருப்பாரு..
டைரக்டருக்கு ஒண்ணு தோணுது அப்படினா.. முதல்ல யுவனோட பி.ஏவ பிடிக்கணும்.. அப்புறமா அவரோட பி.ஏ வ பிடிக்கணும் அப்புறமாத்தான் நீங்க யுவன ரீச் பண்ண முடியும். அது கூட இந்த பிரச்னைக்கு காரணமா இருக்கலாம். இன்னொன்னு படக்குழு எதிர்பார்க்குற நேரத்துல யுவன் அவேலபிலா இல்லாம இருந்துருக்கலாம். இந்தப் பிரச்னையில யுவன் இசை பிடிக்காம வேற இசையமைப்பாளர் கிட்ட போயிருப்பாங்க அப்படிங்கிறத நம்ப முடியாது. ஒரு வேளை படக்குழு கேட்ட நேரத்திற்குள் யுவன் முடித்துக் கொடுக்காததால அவர்கள் ஜிப்ரானை தேடி சென்றிருக்கலாம்.
ஒரு ஸ்டார் ஒரே தயாரிப்பாளருக்கே அடுத்தடுத்த படங்கள் கொடுக்குறது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் இதில் நீங்க பார்க்க வேண்டிய இன்னொரு கோணம் இருக்கு. ஒரு ஸ்டாருக்கு 50 கோடி, 100 கோடி 120 கோடி என சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் சினிமாத் துறையில் மிகவும் குறைவு.
அவ்வளவு பணம் கார்ப்ரேட் நிறுவனங்களிடம்தான் பணம் இருக்கும். அஜித்தே எடுத்துக்குவோம்.. சத்ய ஜோதி பிலிம்ஸூக்கு டேட் கொடுத்தாரு.. அதுக்கப்புறமா அவ்வளவு பணம் கொடுக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் யாரும் அவருக்கு தெரியல.. அதனால அடுத்ததும் சத்ய ஜோதி பிலிம்ஸூக்கே கொடுக்குறாரு..
இதற்கடுத்ததா போனி கபூர் வராரு.. இப்ப இவ்வளவு சம்பளம் கொடுக்கக் கூடிய தயாரிப்பாளர்கள் யாரும் அவரு கண்ணுக்கு தெரியல.. அதனாலத்தான் அவரு தொடர்ந்து போனி கபூருக்கே படம் கொடுக்குறாரு.