தமிழகம்

வரும் 7 ஆம் தேதி மூன்று நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

40views

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழ்நாடு எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று தமிழ்நாடு அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 7-ம் தேதி மதியம் 1.20 மணியளவில் 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். பிறகு 9-ம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார்.

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரத்திற்கு மத்தியில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு செய்து பரிந்துரைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டால், அதை ஆய்வு செய்ய 22வது சட்ட கமிஷனுக்கு நேரம் குறைவாக உள்ளது’ என, சட்ட கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது, பா.ஜ.,வின் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது.மத்தியில் பிரதமர் மோடி தலைமையில், 2014ல் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், பொது சிவில் சட்டம் தொடர்பான அம்சங்களை ஆய்வு செய்யும்படி, 21வது சட்ட கமிஷனுக்கு மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்தது.இது பற்றி முழுமையாக ஆய்வு செய்வதற்குள், 21வது சட்ட கமிஷனின் பதவிக்காலம் 2018ல் முடிந்தது.

இதையடுத்து, 22வது சட்ட கமிஷனை, 2020ம் ஆண்டு பிப்., 24ல் மத்திய அரசு அமைத்தது. இதன் பதவிக்காலம், அடுத்த ஆண்டு முடிகிறது.இதற்கிடையே, பொது சிவில் சட்டம் பற்றி, கடந்த பார்லி., கூட்டத்தொடரில், லோக்சபாவில் பா.ஜ., உறுப்பினர் நிஷிகாந்த் துபே கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதிலில், ‘பொது சிவில் சட்டத்தில், மக்களின் உணர்வுகள் தொடர்பான அம்சங்கள் அடங்கியுள்ளன.’இது பற்றி முழுமையாக ஆய்வு செய்வதற்குள், 21வது சட்ட கமிஷனின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், 22வது சட்ட கமிஷனுக்கு பரிந்துரைக்கப்படும்’ என கூறியிருந்தார். இந்நிலையில், இது குறித்து சட்ட கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:பொது சிவில் சட்டம் பற்றி ஆய்வு செய்ய அரசு பரிந்துரைத்தாலும், அதை ஆய்வு செய்ய 22வது சட்ட கமிஷனுக்கு நேரம் இல்லை.22வது சட்ட கமிஷனில், தலைவர் உட்பட பல இடங்கள் காலியாக உள்ளன.மேலும், சட்ட கமிஷனின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிகிறது. அதனால், பொது சிவில் சட்டம் பற்றி, 22வது சட்ட கமிஷனால் முழுமையாக ஆய்வு செய்ய முடியாது. இவ்வாறு சட்ட கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!